அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் தொடர்பு கொள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்த போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது.
டொனால்ட் ட்ரம்பிற்கு தொலைப்பேசி ஊடாக வாழ்த்து தெரிவிப்பதற்கு மஹிந்த கடந்த பல வாரங்களாக முயற்சித்து வருகிறார். எனினும் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அரசாங்கத்துடன் நெருங்கி செயற்பட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகள் சிலரை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் வழங்கிய ஆலோசனைக்கமைய மஹிந்தவின் அலுவலக பிரதானி ஒருவர் டொனால்ட் ட்ரம்பின் பணிப்பாளர் சபை பிரதானிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன்போது அமெரிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு இணைக்குமாறு கோரியுள்ள போதிலும், முன்னாள் ஜனாதிபதிக்கு அவ்வாறான சந்தர்ப்பம் வழங்கப்படாதென அழைப்பை துண்டித்துள்ளார்.
தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட டொனால்ட் ட்ரம்பின் பணிப்பாளர் சபை பிரதானிக்கு இலங்கை என்று ஒரு நாடு உள்ளதென்பதே தெரியாதென்பது குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும் என இந்த தகவலை வழங்கிய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.