ஒரு கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதமோ, நீதிமன்ற உத்தரவுகளோ கட்சியின் தலைமை அலுவலகத்திற்குத்தான் வரும். ஆனால், அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட வி.கே.சசிகலாவிற்கு, சிறைக்கே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் அவருக்கு தேர்தல் ஆணையம் அந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.
அஇஅதிமுகவின் பொது செயலாளராக விதிகளுக்கு புறம்பாக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து மைத்ரேயன் எம்பி தலைமையில் 11எம்பிகள் நேற்று டில்லி தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் மனுவை அளித்தார்கள்.
இந்த நிலையில் இன்று தலைமை தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் தரப்பின் இந்த புகார் மனுவிற்கு வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.