- மலேசிய நாட்டில் பிரபலமாக இருக்கும் நூடுல்ஸ் சூப் வகை ‘லக்சா லீமக்’.
- இதை சைவம் மற்றும் அசைவம் என இரண்டு விதமாக தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கேரட் – 50 கிராம்
புரோக்கோலி – 50 கிராம்
சிகப்பு குடைமிளகாய் – 50 கிராம்
காளான் – 50 கிராம்
டோபு – 50 கிராம்
நூடுல்ஸ் – 100 கிராம்
எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய்ப்பால் – 1 கப்
வெல்லம் – 1 தேக்கரண்டி
அரைப்பதற்கு:
பாதாம் பருப்பு – 12
மிளகாய் வற்றல் (தண்ணீரில் ஊறவைத்தது) – 10
மிளகாய் வற்றல் (உலர்ந்தது) – 2
வெங்காயம் – 1
பூண்டு – 2 பல்
இஞ்சி – சிறிய துண்டு
தனியா – 1 டீஸ்பூன்
எலுமிச்சைப் புல் – சிறிதளவு
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
காய்கறிகள் அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
நூடுல்ஸை வேகவைத்து தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
பாதாம் பருப்பை பத்து நிமிடங்கள் வெந்நீரில் ஊற வைக்கவும்.
மிக்சியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தனியா, ஊறவைக்காத மிளகாய் வற்றல், சிறிது எலுமிச்சைப் புல், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் ஊறவைத்த பாதாம் மற்றும் மிளகாய் வற்றலும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைத்து வைத்திருக்கும் விழுதினைப் போட்டு 15 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும்.
இந்தக் கலவை தொக்கு பதத்திற்கு வந்து, எண்ணெய் பிரியும் நிலையில் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின்னர் ஒரு கப் தேங்காய்ப் பால் ஊற்றிக் கலந்து சிறிது நேரம் ஆறவிடவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காளான் மற்றும் டோபுவை போட்டு வறுத்துக்கொள்ளவும்.
பின்னர் அதே எண்ணெய்யில் மற்ற காய்கறிகளை வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 3 நிமிடங்கள் மட்டும் வேகவைத்து வடிகட்டி எடுக்கவும்.
பரிமாறும் முறை:
ஒரு கிண்ணத்தில் மசாலா கலந்த கலவையை ஊற்றி, வேகவைத்த நூடுல்ஸை சேர்க்கவும்.
அதன் மேல் வேகவைத்த காய்கறிகள், வறுத்த காளான் மற்றும் டோபு சேர்த்து பரிமாறவும்.