Loading...
தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப நடிகர் நடிகைகள் என பலர் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இதில் தனது நேரடியான, வெளிப்படையான கருத்துக்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருபவர்களில் நடிகர் கமலஹாசனும் ஒருவர்.
அவ்வப்போது நிகழும் முக்கிய நிகழ்வுகள் பிரச்சனைகள் குறித்து தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வரும் கமல், ஜல்லிக்கட்டு விவகாரம், வர்தா புயல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் மாற்றங்கள் குறித்து தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி நடிகர் கமல் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
Loading...
அதில் கூறி இருப்பதாவது:-
இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா? அந்த சொக்கனின் தந்திரமா? பார்ப்போம்.
என்று கருத்து தெரிவித்துள்ளார்.
Loading...