- இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ‘சீமராஜா’, ‘ரஜினிமுருகன்’, ‘டி.எஸ்.பி’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் ‘துணிவு’ திரைப்படத்தை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “துணிவு செம்ம அஜித்குமார் சார் பெர்பாமென்ஸ் வேற லெவல். எச்.வினோத் ஸ்கேம் கான்செப்ட் சூப்பர். இது மக்களுக்கான விழிப்புணர்வு படம்னு சொல்லலாம். வாழ்த்துக்கள் துணிவு படக்குழு” என பதிவிட்டுள்ளார்.
