- தினமும் உணவில் கீரையை சேர்த்து கொள்வது நல்லது.
- விருப்பமான எந்த கீரையையும் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – அரை கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
வெந்தயக்கீரை – 1 கட்டு
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை – சிறிது
நெய் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – அரை தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை – துண்டு
லவங்கம் – 2
ஏலக்காய் – 1
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்.
செய்முறை :
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசி, பருப்பை ஒன்றாக போட்டு கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து ஊற வைத்த அரிசியில் சேர்த்து சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் வெந்தயக்கீரையை சேர்த்து வதக்கவும். (கீரை 5 நிமிடங்கள் வெந்தால் போதுமானது)
அடுத்து அதில் சிறிது உப்பு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
கீரை வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.
கடைசியாக அதில் சிறிதளவு நெய் சேருங்கள்.
இப்போது கமகம வெந்தயக்கீரை பொங்கல் தயார்.