தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர்களின் நலனுக்காக வாரத்தில் ஏழு நாட்களும் திறந்திருக்கவும் இரவு 10 மணி வரை பாடநெறிகளை நடத்தவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்கான மாவட்ட வேலைத்திட்டம் அனுராதபுரத்தில் இடம்பெற்ற போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் வேலை வாய்ப்புகள்
இளைஞர்கள் ஜப்பான் செல்வதற்கான செயல்முறை தற்போது நடந்து வருகிறது.
தற்போது ஜப்பானில் மூன்று மில்லியன் வேலை வாய்ப்புகள் உள்ளன. அதற்கு செல்வதென்றால் இளைஞர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்வது போன்ற தகுதிகளை அடைய ஓராண்டு இரண்டு மாதங்கள் கடக்க வேண்டும்.
இதன்போது மொழி, தொழில்முறை பயிற்சி பெற்ற பின்னர் தொடர்புடைய தேர்வில் தேர்ச்சி, மற்றும் ஜப்பானிய கலாசாரம் கற்றல் என்பவற்றை கற்கவேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.