- டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபேண்டம் X2 ப்ரோ ஸ்மார்ட்போன் உலகில் முதல் முறை அம்சம் கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 5160 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபிலாஷ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபிளாக்ஷிப் ஃபேண்டம் X2 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. கழற்றி, மாட்டிக் கொள்ளும் வசதி கொண்ட போர்டிரெயிட் லென்ஸ் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை டெக்னோ ஃபேண்டம் X2 ப்ரோ பெற்று இருக்கிறது. இந்த லென்ஸ் 65mm அளவில் 2.5X ஆப்டிக்கல் ஜூம் வசதியை கொண்டிருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை 6.8 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமரா, 50MP ISOCELL JN1 சென்சார், 13MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.
டெக்னோ ஃபேண்டம் X2 ப்ரோ அம்சங்கள்:
6.8 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
ஆக்டாகோர் டிமென்சிட்டி 9000 பிராசஸர்
மாலி G710 10-கோர் GPU
12 ஜிபி LPDDR5 ரேம்
256 ஜிபி UFS 3.1 மெமரி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹை ஒஎஸ் 12
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
50MP ISOCELL JN1 சென்சார், 65mm டெலிபோட்டோ கழற்றி, மாட்டும் வசதி கொண்ட லென்ஸ்
13MP அல்ட்ரா வைடு கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி
5160 எம்ஏஹெச் பேட்டரி
45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
டெக்னோ ஃபேண்டம் X2 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர் மற்றும் ஸ்டார்டஸ்ட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு அமேசான் தளத்தில் துவங்கி விட்டது. விற்பனை ஜனவரி 24 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
புது டெக்னோ ஸ்மார்ட்போன் வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் 12 மாதங்களுக்கு அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் முதல் 600 வாடிக்கையாளர்களுக்கு இலவச டெக்னோ பரிசு மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.