Loading...
- 2-ம் நிலை வீராங்கனை துனிசியாவின் ஆன்ஸ் ஜாபியர் தமரா ஜிடான்செக்கை வென்றார்.
- மழையால் நேற்று நிறைய ஆட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன.
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா), தரவரிசையில் 88-வது இடம் வகிக்கும் தமரா ஜிடான்செக்கை (சுலோவேனியா) சந்தித்தார். இதில் ஜாபியர் 7-6 (10-8), 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஒலிம்பிக் சாம்பியன் சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச் 6-1, 6-2 என்ற நேர் செட்டில் விக்டோரியா தோமோவா (பல்கேரியா) வென்றார்.
Loading...
இதேபோல் எஸ்தோனியாவைச் சேர்ந்த கோன்டாவெய்ட்டும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மழையால் நேற்று நிறைய ஆட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன.
Loading...