- ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நத்திங் போன் (1) மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் நத்திங் போன் (1) விலை குறைந்துள்ளது.
ப்ளிப்கார்ட் பிங் சேவிங்ஸ் டேஸ் சிறப்பு விற்பனையின் கீழ், நத்திங் நிறுவனத்தின் நத்திங் போன் (1) மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜனவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு சலுகை விற்பனையில் நத்திங் போன் (1) மாடலுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி நத்திங் போன் (1) மாடலின் விலை ரூ. 25 ஆயிரத்து 999 என குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 33 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் விலை குறைப்பு, சிறப்பு விற்பனை நிறைவு பெற்றதும் மாற்றப்பட்டு விடும்.
சலுகை விவரங்கள்:
நத்திங் போன் (1) 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 25 ஆயிரத்து 999
நத்திங் போன் (1) 8 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 499
நத்திங் போன் (1) 12 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 499
ஐசிஐசிஐ மற்றும் சிட்டி வங்கி பயனர்களுக்கு சிறப்பு வங்கி சலுகைகள் வழங்கப்படுகிறது. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் ரூ. 6 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகைகள் ஜனவரி 20 ஆம் தேதி வரை வழங்கப்படும்.
நத்திங் போன் (1) அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி LPDDR 5 ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 சார்ந்த நத்திங் ஒஎஸ் கொண்டிருக்கும் நத்திங் போன் (1) 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
இத்துடன் 15 வாட் Qi வயர்லெஸ் மற்றும் 5 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், IP53 போன்ற அம்சங்கள் உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, EIS, 50MP சாம்சங் JN1 சென்சார், அல்ட்ரா வைடு லென்ஸ், 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.2, என்எஃப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.