Loading...
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா எதிர்வரும் தொடர்களில் இணைத்து கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.
அவர் தற்போது சிறந்த உடற் தகைமையுடன் உள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மருத்துவ குழுவின் பிரதானி பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.
Loading...
2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் குஷல் ஜனித் பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றிருக்கவில்லை.
இந்தநிலையில் நியுசிலாந்து அணிக்கெதிரான தொடரில் அவர் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
Loading...