- துணிவு – வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியானது.
- ரசிகர்கள் இந்த இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெகு விமர்சையாக கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைப்பிரபலங்களும் இந்த இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
இந்நிலையில், ஏகே 62, தளபதி 67 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த இரண்டு படங்களும் இந்த வருடம் தீபாவளியன்று மீண்டும் மோதவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.