- பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
- இந்த நிகழ்ச்சியில் தற்போது 5 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா, ஏடிகே, கதிர் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 5 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 101 நாட்களை நெருங்கியுள்ளது.
நேற்றைய நிகழ்ச்சியில் பணப்பை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இதில் ஆரம்ப தொகையான 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு கதிர் வெளியேறினார். இந்நிலையில், இறுதி போட்டிக்கு சென்ற விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் DisneyPlusID app மூலம் விக்ரமனுக்கு வாக்களிப்போம். அறம்வெல்லும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.