இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
இவர் பொங்கலை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.
2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் தற்போது ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பொங்கலை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். பொங்கலின் போது தன் பெற்றோர்கள் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்திடம் ஆசிர்வாதம் பெறும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து “உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இது மறக்க முடியாத பொங்கலாக இருக்கும் என்று நம்புகிறேன். கடவுள் மகிழ்ச்சியையும் அமைதியையும் வழங்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.