முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசாங்கத்தினால் 19 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதாந்தம் 950,000 ரூபா வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்ட எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தைக் கூட வழங்க முடியாத சூழ்நிலையில் இவ்வாறான செலவுகளை மேற்கொள்வது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரொருவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் ஒட்டுமொத்த செலவீனங்களைப் பார்க்கும் போது இது ஒரு சிறிய செலவு மட்டுமே.1977 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அரசாங்க செலவினம் வருமானத்தை விட அதிகமாக உள்ளதாகவும், அன்றாட செலவுகளை பேணுவதற்கு போதிய வருமானம் இல்லாத நாடாக நாம் மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
“இந்தச் சிறிய செலவுகளைப் பார்ப்பதற்கு முன், பெரிய அளவிலான செலவுகளைப் பார்க்க வேண்டும். அதாவது அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடன் வட்டி செலுத்துதல். இந்த பெரிய அளவிலான திட்டங்களில் எதையும் குறைக்க முடியாது.
ஊதியங்கள்,ஓய்வூதியங்கள் அரசு ஊழியர்கள் அரசு கடனுக்கான வட்டி. சின்னச் சின்னச் செலவுகளைக் குறைத்தாலும் பரவாயில்லை.தற்போது, நாட்டின் அமைச்சர்கள் கூட அதிக அளவில் நன்கொடை அளித்துள்ளனர்.
நான் இப்போது நான்கு அமைச்சுக்களின் பாரத்தை தனியாளாக சுமந்து வருகிறேன். இதனால் எஞ்சும் தொகையை பாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்படும் வாகன ஒதுக்கீடுகள் தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை எனவும் கூறப்படுகின்றது.