அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், அவருக்கு தற்போது வரை 10 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதிய முதல்வராக நேற்று முன்தினம் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டமன்றத்தை இன்று கூட்டுகிறார். இதனையடுத்து, அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் வரிசையில் அமர்வதற்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், பன்னீர்செல்வத்திற்கு 3வது வரிசையில் முன்னாள் அமைச்சர்களின் பின்னால் 82-ம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதல்வருக்கு பின் வரிசை சீட் ஒதுக்கியதாக வந்த இந்த தகவலால் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.