அப்பாவி பள்ளி மாணவிகள். எல்லோரும் பள்ளியில் படிக்கும் சிறுமிகள். ஆதரவற்ற அந்த மாணவச் செல்வங்களை அரசியல் வாதிகள் இழுத்தடித்த கொடுமை நடந்தது.
அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்ததையடுத்து, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் இருக்கும் கோல்டன்-பே ரிசார்ட்டில் கடந்த 10 நாட்களாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். இன்று தான் அவர்கள் விடுவிக்கப் பட்டனர்.
இந்நிலையில், வாயலூர் தனியார் சிறுவர் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களை கூவத்தூர் அழைத்து வந்து, எடப்பாடி பழனிசாமி வாக்கெடுப்பில் வெற்றிபெற வேண்டும் என்ற தட்டிகளை அவர்கள் கையில் கொடுத்திருக்கிறார் தனியார் விடுதியின் நிர்வாகி.
இன்னும் ஒருசில தினங்களில் பொதுத்தேர்வைச் சந்திக்க இருக்கும் +2 மாணவர்களை சுய லாபத்துக்குப் பயன்படுத்தும் இவர்களை இங்கிருக்கும் காவல்துறையினரும் மக்களும் கண்டித்துள்ளனர்.