இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்கத்தில் கவுண்டமணி நடிக்கும் திரைப்படம் ‘பழனிச்சாமி வாத்தியார்’.
இந்த படத்தில் யோகி பாபு, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலக்கட்டங்களில் தனக்கே உரிய நகைச்சுவை பாணியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் கவுண்டமணி. இவர் கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’படத்தில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து 6 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் கவுண்டமணி நடிப்பில் இறங்கியுள்ளார். அறிமுக இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்கத்தில் கவுண்டமணி நடிக்கவுள்ள திரைப்படம் ‘பழனிச்சாமி வாத்தியார்’. இந்த படத்தில் யோகி பாபு, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.