- ஓட்ஸ் உடல் எடையை குறைக்க உதவும்.
- ஓட்ஸில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – 1/2 கப்
பாசி பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 1
இஞ்சி – 1
பச்சை மிளகாய் – 2
கேரட் – 1
பீன்ஸ் – 10
பச்சை பட்டாணி – 1/4 கப்
பெருங்காய தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு, கொத்தமல்லி இலை – தேவையான அளவு
நெய் – 2 தேக்கரண்டி
பட்டை – 1துண்டு
சீரகம் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 3 கப்
செய்முறை
வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசி பருப்பை அரை மணிநேரம் ஊறவைக்கவும்
கடாயில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, சீரகம் போட்டு தாளித்த பின்னர், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
அடுத்து கேரட், பீன்ஸ், பட்டாணி, பெருங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
காய்கறிகள் வதங்கியபின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் ஊறவைத்த பருப்பு, ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
உப்பு சரிபார்த்து, மேலும் 10 நிமிடம் வேகவிடவும்.
இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
இப்போது சூப்பரான ஓட்ஸ் கிச்சடி ரெடி.