Loading...
2023 பெப்ரவரி 06 ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் முன்னோடித் திட்டத்தில் இலங்கையையும் இணைத்துள்ளதாக சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சை மேற்கோள்காட்டி கொழும்பில் உள்ள சீன தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம், இலங்கையின் சுற்றுலாத் துறை மற்றும் பொருளாதார மீட்சிக்கு உறுதியான ஆதரவை வழங்க சீனா உத்தேசித்துள்ளது என்று தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
Loading...
கோவிட் பரவலைத் தணிக்க, கிட்டத்தட்ட மூன்று வருட கடுமையான தொற்றுநோய் கட்டுப்பாடுகளுக்குப் பின்னர், சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...