பிரபல நடிகர் விஜய் சில தினங்களாக தனது நற்பணி இயக்க மாவட்ட தலைவர்களை சந்தித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய்க்கு அரசியல் ஆர்வம் என்றுமே உண்டு.
தான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் எனவும் அதற்கான நேரத்துக்கும், சந்தர்ப்பத்துக்கும் காத்திருப்பதாகவும் அவர் ஒரு பேட்டியில் ஏற்கனவே கூறியுள்ளார்.
விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் பேசும்போதெல்லாம், நல்ல நேரம் வரும்போது நானே சொல்றேன். அதுவரை பொறுமையா இருங்க ப்ளீஸ் என அரசியல் எண்ட்ரி குறித்து அவர் கூறி வந்தார்
தற்போது சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றுவிட்ட நிலையில், தமிழக அரசியலில் ஏற்ப்பட்டுள்ள வெற்றிடத்தை விஜய் உற்று கவனித்து வருகிறார்.
தற்போது தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பின் இடைவெளியில், தனது நற்பணி இயக்க மாவட்ட தலைவர்களை விஜய் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
அதில், அரசியல் நிலவரம் குறித்து அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக கிசுகிசுக்கப்படுகிறது.