- குஜராத்தில் இந்த இனிப்பு மிகவும் பிரபலம்.
- குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
கெட்டி தயிர் – 250 ml
சர்க்கரை – 1/4 கப்
பாதாம் மற்றும் முந்திரி தலா – 10
உப்பு சேர்க்காத பிஸ்தா – 6-8 நம்பர்ஸ்
ஏலக்காய் – 2
ஜாதிக்காய் பூ – 2 இழைகள்.
செய்முறை:
இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே, தயிரை ஒரு மெல்லிய துணி கொண்டு மூட்டை கட்டி வடிகட்டவும்.
பாதாம், முந்திரி, ஏலக்காய், பிஸ்தா மற்றும் ஜாதிக்காய் பூவை ஒன்றிரண்டாக(வாயில் தட்டு படும் அளவிற்கு) பொடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய தயிருடன் சர்க்கரையை நன்றாக கலந்து கொள்ளும்வரை ஒரு கரண்டியால் அடித்துக் கொள்ளவும்.
பின்னர் பொடி செய்து வைத்துள்ள முந்திரி பாதாம் பொடியை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி பிரிட்ஜில் வைக்கவும்.
தேவைப்படும்போது ஜில்லென்று பரிமாறவும்.
குறிப்புகள் :
ஜாதிக்காய் பூ இல்லை எனில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி சேர்க்கலாம்.