Loading...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள போதிலும் 02 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என தமது ஆணைக்குழு மின்சார சபைக்கு பரிந்துரை செய்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Loading...
பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என்ற கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை இணக்கம் தெரிவித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
Loading...