2023 ஆம் ஆண்டு புதிய பாடசாலை தவணைக்காக மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்குவது தொடர்பான கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
45% பாடப்புத்தகங்கள் அரச அச்சங்களிலும், 55% பாடப்புத்தகங்கள் தனியார் அச்சக நிறுவனங்களாலும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி தகுதிவாய்ந்த 22 தனியார் அச்சக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்தப்பட்டுள்ளது.
இந்தியக் கடன் உதவியின் கீழ் பெறப்பட்ட காகிதத்தின் முதல் கையிருப்பையும் அரச அச்சுகங்கள் பெற்றுள்ளன , தொடர்ந்து பாடநூல் அச்சிடும் பணி நடைபெற்று வருகின்றது.
மேலும் கல்வி அமைச்சர் ஒப்பந்தத் தொகையில் 20 சதவீதத்தை தனியார் அச்சக நிறுவனங்களுக்கு முன்பணமாக வழங்க அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்கான ஏற்பாட்டின் மூலம் கோரப்பட்ட அச்சகங்களுக்கு இந்த முன்பணத்தில் சுமார் 50% வழங்க கல்வி வெளியீடுகள் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.