Loading...
இலங்கையில் மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு புதிய வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Loading...
வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் அநியாயமான வரி விதிப்பை இடைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...