அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள வருமான வரிச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கம் நல்ல பதிலை வழங்காவிட்டால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இது தொடர்பில் நாளை பல தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்து இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும், இந்த வரி விதிப்பு முறையை அரசாங்கம் மீளப்பெறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல தொழிற்சங்கங்கள் முன்மொழிந்துள்ளதாகவும் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், நாளைய தினம் கடுமையான தொழிற்சங் நடவடிக்கை எடுக்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.