இளநீர் வங்கி குடிக்கலாம் என்றால் இளநீர் கடையைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் கண் கட்டிவிடும். இப்படி இருக்கும் இளநீரை பாட்டிலில் அடைத்து விற்று லாபம் பார்க்கலாம் என்ற முயற்சியில் இறங்கிய ஒருவரின் கதை பற்றித் தான் நாம் இன்று பார்க்க இருக்கின்றோம்.
இயற்கையான இந்த இளநீரில் எந்த ரசாயன கலப்படமும் இல்லாமல் நாம் வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம், கால்ஷியம், இரும்பு சத்துடன் குளுக்கோஸ் போன்றவை கிடைக்கும்.
ஒலிம்பிக் விளையாட்டில் போட்டியில் பங்கேற்பவர்களுக்குச் சத்தான பணங்களாக இளநீர் அளிக்கின்றனர். இப்படிப் பட்ட இளநீர் பாகெட்களில், பாட்லிகளில் எல்லாம் அடைத்து வைத்து விற்பனை செய்து வருவது மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படி கேரளாவில் வணிகம் செய்யும் ஒருவருடைய கதையைத் தான் நாம் இங்குப் பார்க்க இருக்கின்றோம். இந்த கட்டுரை பல பேருக்கு இத்தொழிலை துவங்கவும் ஒரு வழிக்காட்டியாக அமையும்.
கேரள மாநிலத்தில் உள்ள வைக்கித்தில் உள்ளவர்கள் தென்னை மரங்கள் வைத்துத் தான் பெரும்பாலும் பிழைப்பை நடத்தி வருகின்றனர். இதற்காக இங்கு உள்ள டிவி புரம் ஃபார்மஸ் சர்வீசஸ் வங்கி இளநீர் உள்ளிட்ட பானங்களை விற்பனை செய்யும் பிரிவை நடத்தி வந்தது. இந்தப் பிரிவு நட்டத்தில் இயங்கிவந்த நேரத்தில் பைஜு என்பவர் தான் இந்த இளநீர் பிரிவை எடுத்து நடத்தகின்றேன் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நிர்வாகம் இளநீர் பிரிவை பைஜுவிற்கு லீஸில் அளித்தது. இதில் இருந்து பெறும் லாபத்தில் ஒரு பங்கை வங்கிக்கு அளித்தால் போதும் என்று ஒப்பந்தமும் போடப்பட்டது.
நிறுவனத்தை எடுத்து நடத்தும் பொறுப்பு பைஜுவிற்கு வந்த போதிலும் வங்கி எப்படி நட்டத்தைச் சந்தித்ததோ அதையே இவரும் சந்தித்தார். பின்னர் தனது விற்பனை முறையை வலிமை படுத்த திட்டம் போட துவங்கினார் பைஜு. இதற்காக மார்க்கெட்டிங் குழு ஒன்றை உருவாக்கி சந்தை நிலவரத்தை ஆராய்ந்து நிரந்தரமான விலை, பிறாண்டு போன்ற சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.