Loading...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெயசங்கர் இலங்கை தலைவர்களுடன் முக்கிய பேச்சவார்த்தை நடத்தவுள்ளதாகத் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவுச் செயலாளர் நேற்று கொழும்பு வந்துள்ளார்.
இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நாளையதினம் சந்திக்க உள்ளார்.
Loading...
இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடர் மற்றும் புதிய அரசியல் அமைப்பு விவகாரம் என்பன குறித்து அவர் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், திருகோணமலை எண்ணை கிடங்குகள் உள்ளிட்ட மேலும்சில முக்கிய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...