இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ரேவுட் ஹால் (54). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே அவருக்கு தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. எனவே, அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இருந்தும் அவருக்கு தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. 24 மணி நேரத்தில் அதாவது ஒரு நாளில் 27 தடவை மாரடைப்பு தாக்கியது.
இருந்தும் அவர் உயிர் பிழைத்தார். இது ஒரு அதிசய நிகழ்வு என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நான் உயிர் பிழைப்பேன் என கருதவில்லை.
ஒரு நாளில் 27 தடவை நான் செத்து பிழைத்து இருக்கிறேன். டாக்டர்கள் தான் எனது உயிரை காப்பாற்றியுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.