இலங்கை மின்சார சபையினால் இன்று முன்மொழியப்பட்ட திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கு தாம் அனுமதியளிக்கவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 17 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், வழமை போன்று இன்றும் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை இன்று அறிவித்துள்ளது.
பரீட்சை காலத்தில் மின்வெட்டு
இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 331,000 இற்கும் அதிகமான மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, அறிவிக்கப்பட்ட திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கு அவர்கள் அங்கீகாரம் வழங்கப் போவதில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் இதுபோன்ற மின்வெட்டு எதுவும் அங்கீகரிக்கப்படாதது மற்றும் சட்டவிரோதமானது என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.