Loading...
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பங்குகளை விற்பதாக அந்நிறுவனம் அறிவித்ததால், முதலீட்டாளர்கள் ஒரே நாளில் பங்குகளை வாங்கிக் குவித்தனர்.
இந்நிலையில், பங்கு விற்பனையை நிறுத்துவதாகவும் முதலீட்டாளர்களுக்கு மொத்தப் பணத்தை திருப்பித் தருவதாகவும் அதானி எண்டர்பிரைசஸ் அறிவித்துள்ளது.
Loading...
ஹிண்டன்பர்க் நிறுவனம் அளித்த அறிக்கை காரணமாக பங்குச் சந்தையில் அதானி நிறுவனப் பங்குகள் கடுமையாக சரிந்துவருகின்றன.
இதனைத்தொடர்ந்து, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 15ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். நேற்றைய பங்குகளும் ஒரே நாளில் 28 சதவீதம் சரிந்தன.
Loading...