முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகளை இந்திய கண்காணித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வர முயற்சித்து வருகிறார். இதன் காரணமாக இலங்கையில் அரசியல் ரீதியில் பல மாற்றங்கள் ஏற்பட கூடும் வாய்ப்புள்ளது. இது தொடர்பில் இந்திய அரசாங்கம் தீவிர அவதானத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் அரசியல் மீள் வருகையை தொடர்ந்து இலங்கையில் அரசியல் சூழலில் பல மாற்றங்கள் ஏற்படும் எனவும், பல பிளவுகள் ஏற்படும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய இலங்கை அரசியல் நிலைமை மற்றும் சம்பவங்களை கருத்திற் கொண்டு கண்கானிக்கும் போது இந்த நிலைமை தெளிவாகியுள்ளதென குறித்த இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் மஹிந்த ராஜபக்சவை சுற்றியுள்ள அரசியல் தரப்பினர்களுக்கு இடையில் பிரிவுகள் ஏற்பட கூடும் எனவும், இது தொடர்பில் இந்திய அரசாங்கம் அவதானத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொது செயலாளர் ராம் மாதவ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு இடையில் இரு தரப்பு விடயங்கள் மற்றும் நாட்டினுள் இடம்பெறவுள்ள இந்து சமுத்திர மாநாடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவுடன் மிகவும் நெருக்கமான உறவினை கொண்டிருந்தமை, கடந்த காலங்களில் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.