Loading...
நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் Bimala Rai Paudyal இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் வரவேற்றுள்ளார்.
Loading...
வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் Bimala Rai Paudyal மேற்கொளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இந்தநிலையில் நேபாள வெளிவிவகார அமைச்சர் Bimala Rai Paudyal தனது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
அத்துடன், பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டவர்களையும் சந்தித்து பேசவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Loading...