- இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பையா’.
- இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்பட்டது.
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்து 2010-ல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற பையா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. பையா 2-ம் பாகத்தில் கார்த்தி நடிக்கவில்லை பதிலாக ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர் என்றும் இதில் கதாநாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிடம் பேசி வருவதாகவும் இணையத்தில் பேசப்பட்டது.
ஏற்கனவே தமிழ் படத்தில் நடிக்க ஜான்வி கபூர் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் பையா 2-ம் பாகத்தில் நடிக்க சம்மதிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இதனை அவரது தந்தையும் தயாரிப்பாளருமான போனிக் கபூர் மறுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஜான்வி கபூர் தமிழில் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.