- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
- இப்படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ'(Leo – Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து இப்படத்தின் டைட்டில் புரோமோ நேற்று மாலை வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், நடிகர் விஜய் மலையாள ரசிகர்களை தவிர்த்தாரா..? என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. அதாவது, ‘லியோ’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டரில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மட்டுமே வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மலையாளம் இடம்பெறாதது சமூக வலைதளத்தில் பேசு பொருளாகியுள்ளது. மலையாளத்தில் விஜய்க்கு அதிக அளவு ரசிகர் பட்டாளம் இருக்கையில் இந்த அறிவுப்பு மலையாள ரசிகர்களை ஏமாற்றியதா.? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.