Loading...
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கடன் உத்தரவாததிற்காக தற்போது சீனாவுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியா ஏற்கனவே கடன் உத்தரவாதங்களை வழங்கியுள்ளதாகவும், மீதமுள்ள கடனாளர்களுடன் பேச்சுவார்த்தை விரைவில் நிறைவுபெறும் என்றும் கூறியுள்ளார்.
Loading...
மோசமான கொள்கைகள் காரணமாக இலங்கை தற்போதைய இக்கட்டான நிலையில் இருப்பதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.
இருப்பினும் அரசாங்கம் மக்களின் இன்னல்களைப் போக்க பாடுபடுகிறது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
Loading...