இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘லியோ’.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ'(Leo – Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், ‘லியோ’ படத்தை புகழ்ந்து நடிகர் பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “காதல்(ர்)நவாஸ்கான் சாலையில் நேற்று… பெரும் பணக்கார காப்பி கடைகளைவிட, நாயர் கடை சாயாவே என் சாய்ஸ்! ஸ்ட்ராங்கா, சக்கரை கம்மியா, தூளை மாத்தி, கண்ணாடி டம்ளரின் உதட்டடோரத்தை விரல்களால் வருடித் துடைத்தபடி, வாயை வைத்துரிஞ்சி சூடா ஒரு சிங்கிள் அது தே(னீர்)வாமிர்தம் !
CARB(அரிசி/கோதுமை)பினில் அன்றி-cold Coffeeயினிலும் அவரவர் பெயர் எழுதி எழுதியிருக்கிறதே!! but bloody Tasty! அந்த காலத்தில் நான் விரும்பிக் குடித்தது லியோ காபி( விளம்பரத்திற்கு அணுகிவிடுவார்களோ?) சமீபத்தில் விரும்பிப் பார்த்ததும் பிடித்ததால் திரும்பப் பார்த்ததும் ‘leo’ !
லியோ: தளபதி விஜய் கலீலியோ: லோகேஷ் கனகராஜ் ! அவரோ அறிவியல் அறிஞர் இவரோ அறிவின் செறிவர்! செறிவு: ConcenTRIC(k) எதையுமே திட்டமிட்டு, அடர்த்தியான கவனத்துடன் வெற்றியாக்கும் trick ! LOKESH ! Low cash budget நகரை மா’நகராக்கி, இன்று Highest paid director ஆக, ஆகச்சிறந்த வெற்றி படைப்பின் universe ஆக இருப்பது பெருமை!” என்று பதிவிட்டுள்ளார்.