- தனுஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் வாத்தி படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.
- ’வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா மேனன். தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வாத்தி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் வாத்தி படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் நடிகை சம்யுக்தா கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர், சம்யுக்தாவை அழைத்த போது அவரது சாதி பெயரான மேனன் என்பதையும் சேர்த்து கூறினார். உடனே சம்யுக்தா, அந்த தொகுப்பாளரிடம், தனது பெயரில் இப்போது சாதி பெயர் இல்லை, எனவே நீங்கள் என்னை சம்யுக்தா என்று மட்டுமே அழைத்தால் போதும். முன்பெல்லாம் எனது பெயருடன் சாதி பெயரும் இணைந்தே இருந்தது. இப்போது அதனை நானே நீக்கிவிட்டேன். எனவே மற்றவர்கள் என்னை இனி சம்யுக்தா என்றே அழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.