- டுவிட்டர் தளத்தில் வழங்கப்பட்டு வரும் விசேஷ டுவிட்டர் புளூ சேவை இந்திய விலை விவரங்கள் வெளியீடு.
- டுவிட்டர் புளூ சந்தாவின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்திய பயனர்கள் இனி டுவிட்டர் புளூ சந்தாவில் இணைய முடியும். முன்னதாக தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த டுவிட்டர் புளூ சந்தா தற்போது இந்தியாவிலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் புளூ சந்தா பெறுவோருக்கு புளூ டிக் வழங்கப்பட்டு விடும். இந்தியாவில் டுவிட்டர் புளூ கட்டணம் வலைதளம் மற்றும் மொபைலில் மாதம் முறையே ரூ. 650 மற்றும் ரூ. 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வலைதள வெர்ஷனுக்கு வருடாந்திர அடிப்படையில் சந்தா செலுத்துவோருக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில், பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தாவை வருடாந்திர அடிப்படையில் பெறும் போது ரூ. 6 ஆயிரத்து 800 மட்டுமே செலுத்தினால் போதுமானது. முன்னதாக வெரிஃபைடு டேக் பெற வாடிக்கையாளர்கள் தனியே விண்ணப்பிக்க வேண்டி இருந்தது. மேலும் இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் வழங்கப்பட்டு இருந்த நிலையில், டுவிட்டர் புளூ சேவை தற்போது இந்தியா, பிரேசில், இந்தோனேசியா என மொத்தம் 15 நாடுகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்போர், தங்களின் டுவிட்களை எடிட் செய்வது, நீண்ட நேர வீடியோக்களை பதிவிடுவது, 50 சதவீதம் வரை குறைந்த விளம்பரங்களை பெறுவது, புதிய அம்சங்களை முன்கூட்டியே பெற முடியும்.
இத்துடன் டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்போரின் பதிவுகளுக்கு டுவிட்டர் முன்னுரிமை கொடுக்கும். டுவிட் செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் அதிகபட்சமாக ஐந்து முறை அவற்றை எடிட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
டுவிட்டர் புளூ சேவையை பெறுவது எப்படி?
பயனர்கள் டுவிட்டர் புளூ சேவையை இயக்க தங்களின் ப்ரோஃபைல் படத்தின் இடது புறத்தில் க்ளிக் செய்ய வேண்டும். இத்துடன் அதிகபட்சம் டுவிட்டர் கணக்கை துவங்கி 90 நாட்கள் கழித்தே டுவிட்டர் புளூ சேவையை பெற முடியும். டுவிட்டர் புளூ சேவைக்கு சந்தா செலுத்தி இருப்பவர்கள், தங்களின் புகைப்படம், ப்ரோஃபைல் பெயர் உள்ளிட்டவைகளை வெரிஃபைடு பேட்ஜ் வழங்கும் வரை மாற்ற வேண்டாம் என டுவிட்டர் கேட்டுக் கொண்டுள்ளது.