நம்மில் பலபேர்கள் சூடாக உணவு சாப்பிடுவதையே விரும்புவோம், இது நல்லதா என்று யோசித்தது உண்டா?
சூடாக இருக்கும் உணவை சாப்பிடுவது நல்லதா?
உணவு சாப்பிடும் போது ஆவி பறக்க அல்லது நன்றாக ஆறி இருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து, இளஞ்சூட்டில் மிதமான இருக்கும் போது சாப்பிடுவதே சிறந்த பழக்கமாகும்.
ஏனெனில் மிகுந்த சூட்டில் இருக்கும் போது, உணவுகளை சாப்பிட்டால், அது நமது குடலுக்கு உணவுகளை உணவுப் பாதை வழியாக எடுத்து செல்லும் மியூகோசா என்ற படலம் பாதிப்படையச் செய்கிறது.
இந்த படலமானது, நமது உடம்பின் உணவுக்குழலில் ஆரம்பித்து குடல் வரை இருக்கும் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது.
எனவே நாம் அன்றாடம் சூடான உணவுகளை சாப்பிட்டு வந்தால், மியூகோசா என்ற படலத்தை பாதிப்படையச் செய்து அல்சர் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
மேலும் இந்த பிரச்சனையை நாம் சரியாக கவனிக்காமல் இருந்தால், செரிமானப் பிரச்சனை, வாய்ப்புண் ஏற்படுவதுடன், அது புற்றுநோயாக மாறுவதற்கு கூட அதிக வாய்ப்புள்ளது.
எனவே நாம் தினமும் உணவுகளை சாப்பிடும் போது, மிதமான இளஞ்சூட்டில் சாப்பிடுவதே மிகவும் நல்லது.