இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் நாளை முக்கிய தலைவர்களுடன் சந்திப்பை நடத்தவுள்ளார்.
அந்தவகையில் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
குறித்த சந்திப்பில் இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வர்த்தக துறைகள் தொடர்பிலும், எதிர்கால நிலைமைகளை அறிவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
மேலும் சந்திப்பில், புதிய அரசியலமைப்பு விடயத்தில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும், போர்க்குற்ற விசாரணைக்கான நீதிப் பொறிமுறைகள் அமைப்பது, மனித உரிமைகள் பேரவையை எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் திருகோணமலை விவகாரங்கள் , வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.