Loading...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அமைச்சரவையின் பெரும்பான்மையை நேற்று சட்டசபையில் நிரூபித்து தனது ஆட்சியை பலப்படுத்தியுள்ளார். இந்த சட்டசபைக்குள் நேற்று நடந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபைக்குள் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களின் அமளி, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டது என நேற்று தமிழக அரசியலில் பெரும் சூறாவளியே தாக்கியது எனலாம்.
நேற்று தமிழக அரசியலில் தொடர்ந்து நடந்த இந்த சம்பவங்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் கமல், சூர்யா ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், தற்போது அரவிந்த்சாமியும் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
Loading...
அவர் கூறும்போது, என்னைப் பொறுத்தவரை தற்போதுள்ள சூழ்நிலையில் மறுதேர்தல் மட்டுமே ஒரே தீர்வு. இது ஒன்றும் மக்களின் தீர்ப்பு அல்ல” என்று தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி.
Loading...