Loading...
முன்னதாக திட்டமிட்டபடி நாளை தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சந்தித்த அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
மார்ச் 9 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் தீர்மானிக்கவில்லை என அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க அரச அச்சம் மறுத்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Loading...