Loading...
காதலர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் பூங்கொத்துகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் கடந்த காலங்களை போன்று இந்த வருடம் பூங்கொத்துகள் எதிர்ப்பார்த்த அளவில் விற்பனை செய்யப்படவில்லை என விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Loading...
அந்த வகையில், மருதானை டீன்ஸ் வீதியில் உள்ள பூக்கடைகளில் ஒரு ரோஜா பூவின் விலை 400 முதல் 600 ரூபாவாகவும், 12 ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்து, 12,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக விற்பனை செய்வதற்காக தயார் பூங்கொத்து செய்யப்பட்ட போதும் இம்முறை அதிக கிராக்கி ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
Loading...