விஞ்ஞான ஆய்வின் படி வடபகுதியில் கடல் அட்டை பண்ணைகள் அமைப்பது இயற்கை வளத்தை பாதிக்கும் என வடமாகாண கடற்தொழில் இணையத்தின் இணைப்பாளர் அன்ரனி ஜெசுதாசன் தெரிவித்துள்ளார்.
கடலட்டைப் பண்ணையினால் பாதிக்கப்படுகிற வட மாகாண மீனவ பிரதிநிதிகளை உள்ளடக்கி ஒரு இன்று(14.02.2023) கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடலட்டை பண்ணை சாதகமானதா? பாதகமானதா?
மேலும் கூறுகையில்,“அந்த கலந்துரையாடலில் கடலட்டை பண்ணை கடற்தொழிலாளர்களுக்கு சாதகமானதா? பாதகமானதா? என்று இந்த அட்டைப் பண்ணை தொடர்பில் ஆராய்ந்து இருந்தோம்.
ஒட்டுமொத்த விஞ்ஞான பூர்வமான கருத்தின்படி,இலங்கை கடற்பரப்புக்குள் குறிப்பாக வடபகுதியில் அட்டைப்பண்ணை உருவாக்குவது ஒரு முறையற்ற விடயமாக அது கடற்தொழிலாளர்களுடைய எதிர்கால வாழ்வை பாதிக்கின்ற ஒரு விடயமாக கலந்துரையாடப்பட்டது.
ஆகவே இந்த கலந்துரையாடலில் இறுதியிலே எடுக்கப்பட்ட முடிவானது,வடபகுதியிலே மேற்கொள்ளப்படுகின்ற அட்டைப் பண்ணைகள் பாரம்பரிய மீன்பிடி முறைக்கு எதிரானதாகவும் இயற்கை வளங்களை அளிக்கின்றதாகவும் மீன்கள் புலம்பெயரும் இடங்களை தடுக்கின்ற மீன்கள் முட்டையிடுகின்ற குஞ்சு பொரிக்கின்ற இடங்கள் மறுக்கப்படுகின்றதாக காணப்படுகிறது.
ஆழமான ஆய்வு
தொடர்ச்சியாக இலங்கையில் வடபகுதியில் 17 விதமான அட்டைகள் காணப்படுகின்றன.
அந்த அட்டைகள் அழிக்கப்படுவதற்கு இந்த அட்டை பண்ணைகள் ஒரு காரணமாக இருக்கும் என முடிவெடுக்கப்பட்டது.
ஆகவே இதுதொடர்பாக அமைச்சரும் ஏனைய நக்ரா நாறா நிறுவனங்கள் கடற்தொழில் பரிசோதர்கள் இது தொடர்பில் ஆழமான ஆய்வு செய்து உடனடியாக இந்த அட்டை பண்ணைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கியமாக சீனாவினுடைய அட்டை குஞ்சுகளை கொண்டு வந்து தான் இந்த அட்டை பண்ணைகளிலே அட்டைகள் வளர்க்கப்படுகின்றன. இது கலப்பு முறையான ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது.
இந்த விடயமானது சாதாரணமாக வடபகுதியில் இருக்கின்ற இயற்கையாக உருவாகின்ற அட்டைகளினுடைய அழிவுக்கு இது காரணமாக இருக்கின்றது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்ற அமைப்பின் கருத்துபடி, ஒரு ஆழமான ஆய்வினை செய்து இந்த அட்டைப் பண்ணைகளை தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் தற்பொழுது அட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் தொழில்கள் கடற்தொழிலாளர்களின் தொழில் இடங்கள் மறுக்கப்படுகின்றன. மீன்களின் உற்பத்தியும் தடுக்கப்படுகின்றது இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என கூறியுள்ளார்.