இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் பதிவு செய்யப்படாத மற்றும் தரம் குறைந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சங்கத்தின் உறுப்பினர் சேர்ந்த அஜித் தென்னக்கோன் இன்று இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மருந்து இறக்குமதி
தடுப்புப்பட்டியலில் உள்ள இந்திய மருந்து நிறுவனங்களிடம் இருந்து தரம் குறைந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும் இந்த தவறை சரி செய்யுமாறு அரசை வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இலங்கை சந்தைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கையால் அங்கீகரிக்கப்படாத இந்திய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். எனினும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.