போராடும் பொருளாதாரங்களின் இழப்புக்களுக்கு சீனா பொறுப்பேற்க தயாராக இருக்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கை மற்றும் சாம்பியா போன்ற நாடுகளுக்கான நிவாரணங்களை தடுக்கும் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டாம் என்றும் இந்தியா கோரியுள்ளது.
சீனா வெளிப்படையாக வெளியே வந்து தங்களுடைய கடன்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பதை கூறவேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களின் குழுவான ஜி 20 குழுவின் இந்த ஆண்டுக்கான தலைமையான இந்தியாவின் செயற்பாட்டாளரான அமிதாப் காந்த் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
இதனைவிடுத்து சர்வதேச நாணய நிதியம், கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டு எவ்வாறு சீனக் கடனைத் தீர்க்கப் போகிறது. அது எப்படி சாத்தியம்? என்று அமிதாப் காந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகின் ஏழ்மையான நாடுகளில் சுமார் 60வீதமானவை கடன் நெருக்கடியில் அல்லது அதிக ஆபத்தில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத் தரவு காட்டுகிறது.
இந்தநிலையில் ஜி20 குழு, போராடும் நாடுகளின் கடன்களை மறுசீரமைப்பதற்கான ஒரு வரைபடத்தை அமைத்துள்ளது.
இது பொதுவான கட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது – இது பாரம்பரிய பணக்கார கடனாளி நாடுகளின் பாரிஸ் கிளப்பை சீனாவுடன் இணைந்து குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன்களை தனித்தனியாக மறுகட்டமைக்க முயற்சிக்கிறது.
பேச்சுவார்த்தை
எனினும் சில கடனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த கருத்து வேறுபாடுகள் தீர்வுக்கு தாமதத்தை ஏற்படுத்துகின்றன. இதேவேளை போராடும் நாடுகளின் கடன்களை மறுசீரமைப்பதில் பலதரப்பு கடன் வழங்குபவர்களின் கடனும் சேர்க்கப்பட வேண்டும் என்று பீய்ஜிங் அழைப்பு விடுத்துள்ளது,எனினும் இந்த நடவடிக்கையை உலக வங்கி உறுதியாக நிராகரித்துள்ளது.
இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இந்தியா ஆகியவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை உலகளாவிய கடன் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான தொடக்கக் கூட்டத்தை நடத்துகின்றன.
இந்தியாவின் பெங்களூரில் ஜி-20 நாடுகளின் நிதி மற்றும் நாணயத் தலைவர்களின் கூட்டத்திற்கு முன் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
இதற்கிடையில் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 75 ஏழ்மையான நாடுகள் தங்கள் கடனாளிகளுக்கு சுமார் 326 பில்லியன் டொலர்களை மீளச்செலுத்த வேண்டியுள்ளன என்று உலக வங்கியின் தரவு காட்டுகிறது என்றும் ஜி 20 குழுவின் இந்த ஆண்டுக்கான தலைமையாளரான இந்தியாவின் செயற்பாட்டாளரான அமிதாப் காந்த் அழைப்பு விடுத்துள்ளார்.