பொதுவாகவே குழந்தைகள் உணவுகளில் அறைகுறையாகத்தான் உண்பார்கள். ஆனால் அவர்களுக்கு பிடித்த உணவுகள் என்றால் வெறுப்பில்லாமல் சாப்பிடுவார்கள்.
அவ்வாறான உணவுகள் என்னென்ன என்பதை அறிந்துக்கொண்டாலே அவர்களுக்கு பிடித்தமான உணவுகள் சில வரிசையில் சேர்ந்து விடும்.
அந்தவகையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் காய்கறி தோசையை செய்து கொடுத்துப்பாருங்கள்.
காய்கறி தோசையை எவ்வாறு செய்வதென்றுபார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு – 2 கப்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
வர மிளகாய் – 4
கேரட் – 1
பீன்ஸ் – 10
கோஸ் – சிறிதளவு
ஸ்வீட் கார்ன் – ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் – 1
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – அரை கப்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கேரட்டை துருவிக்கொள்ளவும். வரமிளகாயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், இஞ்சி, கோஸ், பீன்ஸ், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ப.மிளகாய், இஞ்சி, கோஸ், பீன்ஸ், கொத்தமல்லி, வெங்காயம், துருவிய கேரட், வேக வைத்த ஸ்வீட் கார்ன், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்பு மிளகுத்தூள், கொரகொரப்பாக அரைத்த வரமிளகாய், தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளுங்கள்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை எடுத்து தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
அவ்வளவுதான் இப்போது மொறுமொறுப்பான காய்கறி தோசை தயார்.