Loading...
காணி உறுதிப்பத்திரங்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து சுமார் 60 கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சட்டத்தரணி ஒருவர் கைது செய்ய்பட்டுள்ளார்.
குறித்த சட்டத்தரணியை கண்டி மடவளை பிரதேசத்தில் வைத்து கொழும்பு நிதி மோசடி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading...
பிரபல இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் தலைவர்
மடவளை பிரதேசத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து நேற்று (13ஆம் திகதி) பிற்பகல் கைது செய்யப்பட்ட இந்த சட்டத்தரணி, நாட்டில் உள்ள பிரபல இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் கண்டி மாவட்ட தலைவராகவும் செயற்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Loading...