பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவிற்கு நடைபெற்ற திருமணத்தில் தாலியட்டியது யார் என்பது காணொளியாக குறித்த நடிகை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எழில் திருமண காட்சிகள் தான் வந்திருக்கிறது.
வில்லி வர்ஷினி உடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திவிட்டு எழிலுக்கு அவர் காதலித்து வரும் அமிர்தா என்ற பெண்ணுடனேயே திருமணத்தை நடத்தி வைக்கிறார் பாக்கியா.
பாக்யா தவிர குடும்பத்தில் இருக்கும் வேறு யாருக்கும் அந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை. அதனால் எழில் – அமிர்தா மணக்கோலத்தில் வீட்டுக்கு வந்தால் பாட்டி அவர்களை வாசலிலேயே நிற்கவைத்து அப்படியே வெளியில் போக சொல்கிறார். அதன் பின் அவரை சமாளிக்க படாத பாடு படுகிறார் பாக்யா.
கல்யாணம் நடந்தது எப்படி?
உண்மையான திருமணம் என்றால் மாப்பிள்ளை தான் பெண் கழுத்தில் தாலி காட்டுவார். ஆனால் சீரியல் கல்யாணத்தில் தாலியை யார் கட்டினார்கள் என்பதை நீங்களே வீடியோவில் பாருங்க.
அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா தான் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். சீரியல் கல்யாணம் என்றால் இப்படித்தான் போல..